காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். அவரை திமுக செயல்தலைவர்
மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “கருணாநிதி என்ன அடையாளம் கண்டுகொண்டார். அதுவே
எனக்கு போதும். தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கையில் என் கொள்கையில் திராவிடம் இருக்காமல் போகுமா? இருக்கும்.
கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ், மக்களின் மீதான அக்கறை ஆகியவை நான் கற்றுக்கொள்ள வேண்டியவை. இவை பலரிடம்
இருந்தாலும், அவரிடம் தனித்தன்மை இருக்கிறது. ஆட்சியை பிடிப்பதில் திமுகவிற்கு ஒரு கனவு உள்ளது. எனக்கு ஒரு கனவு உள்ளது.
என்னுடைய கொள்கையை திமுக தெரிந்து கொண்ட பிறகு, அவர்களுக்கும், எனக்கும் சரி என்று பட்டால் எதிர்காலத்தில் கூட்டணி
குறித்து முடிவுசெய்வோம். நான் அரசியலுக்கு வந்திருப்பது மக்கள் சேவைக்காகத்தான். களத்தில் யாரையும் எதிர்கொள்ளவோ அல்லது
யாரையும் அசைக்கவோ இல்லை” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக தலைமையில்
அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும், அந்தக் கூட்டத்திற்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் திமுக
தெரிவித்தார். மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவரும் பங்கேற்பதாக
உறுதியளித்ததாகவும் ஸ்டாலின் கூறினார். மேலும் புதிய கட்சி தொடங்கும் கமலுக்கு, ஸ்டாலின் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொண்டார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்