JUST IN

Advertisement

எனக்கு பட்டமெல்லாம் வேண்டாம்: விராத் கோலி நெகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்னாப்பிரிக்க அணியுடனான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறியதாவது:


Advertisement

கடந்த போட்டியில் சரியான மனநிலையில் இல்லை. இந்தப் போட்டியில் நன்றாக விளையாடினேன். விளக்கொளியில் இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது பிடித்திருக்கிறது. அதற்காகவே பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தேன். இந்தப் போட்டியில்  ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக எதிர்கொண்டேன். அவர்களும் தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பந்துகளையே வீசினார்கள். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. 


Advertisement

இந்த வெற்றிக்காக, எனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக, என் மனைவி(அனுஷ்கா சர்மா)க்கு. எனது ஊக்கத்துக்கு அவர்தான் காரணம். இந்த தொடருக்குth தயாராகி வர எனக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை. திருமணத்துக்காக மூன்று வாரம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தேன். பிறகு வந்துவிட்டேன். என் மனதில் தென்னாப்பிரிக்க தொடரை வெல்ல வேண்டும் என்கிற உந்துதல் இருந்துகொண்டே இருந்தது. டெஸ்ட் தொடரை போராடி இழந்த பிறகு ஒரு நாள் தொடரை வெல்வோம் என்று சொல்லியிருந்தேன். அதே போல வென்றிருக்கிறோம். இளம் சுழல் பந்துவீச்சாளர்கள் சேஹல், குல்தீப் இருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள். ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோரின் பங்கும் நன்றாக இருந்தது. இந்த வெற்றியை அடுத்து டி20 தொடரில் கவனம் செலுத்தப் போகிறோம்.


என்னை ’பேட்டிங் சூப்பர்மேன்’ என்று சொல்வதை பற்றிக் கேட்கிறார்கள். எனக்கு எந்தப் பட்டத்தின் மீதும் விருப்பம் வில்லை. தலைப்பு செய்தியாகவும் நான் விரும்பவில்லை. என்னை பற்றி என்ன எழுதினாலும் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் எழுதுவது அவர்கள் சுதந்திரம். ஆனால், நான் என் வேலையை செய்கிறேன். அதற்காக கடுமையாக பயிற்சி பெறுகிறேன். அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதை நோக்கியே என் பயணம் இருக்கிறது. 
இவ்வாறு விராத் கோலி கூறினார்.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement