இந்திய ரசிகர் மீது தாஹிர் இனவெறி புகார்: தென்னாப்பிரிக்கா விசாரணை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கூறிய இனவெறி புகாரை அடுத்து, அது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.


Advertisement

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். இந்தியாவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் இவர் விளையாடவில்லை. 12-வது வீரராக இருந்தார். சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லும்போது சில ரசிகர்கள் அவரை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ரசிகரிடம் தாஹிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
பின்னர் இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்த தாஹிர், ரசிகரையும் அடையாளம் காட்டினார். அந்த ரசிகர் வெளியேற்றப்பட்டார். அவர், இந்திய அணி வீரர்களின் ஜெர்சி போல அணிந்து இருந்தார். தன்னை இனவெறியுடன் ரசிகர் திட்டியதாக தாஹிர் புகார் தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement