JUST IN

Advertisement

ரசிகர்கள் என்னை பார்க்க சென்னை வர வேண்டாம்: ராகவா லாரன்ஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இனி எந்தஒரு ரசிகரும் தன்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம் எனவும் ரசிகர்களை அவர்களது சொந்த ஊரிலேயே போய் தான் சந்திக்க உள்ளதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement

2018 புத்தாண்டையொட்டி நடிகர் ராகவா லாரன்சுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல சென்னை வந்த ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் விபத்தில் சிக்சி உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்கில் அந்த நேரத்தில் ராகவா லாரான்ஸ் கலந்து கொண்டு அஞ்சலியும் செலுத்தினார்.

இந்நிலையில் இனி எந்த ஒரு ரசிகரும் தன்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ என்னை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த ஆர்.சேகர் சென்னை வரும் போது விபத்தில் இறந்து போனார். அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது. அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம். வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். சந்திக்கும் இடம் நேரம் தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். அதன் முதல் கட்டமாக வரும் 7-ம் தேதி புதன் கிழமை சேலத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளேன்” இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement