Advertisement

வருகிறது இந்தியன் 2! அறிவித்தார் ஷங்கர்..

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியன் 2 திரைப்படம் எடுப்பதை இயக்குநர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.


Advertisement

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மெகாஹிட் ஆன திரைப்படம் இந்தியன். 1996ல் வெளிவந்த இப்படம், லஞ்சத்திற்கு எதிரான கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.எம்.ரத்தினம் தயாரித்த இப்படத்தில், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் 2ஆம் பாகம் எடுக்கவுள்ளதாக படக்குழு சார்பில் தகவல் வெளியாகியிருந்தது. இதற்கிடையே கமல்ஹாசன் அரசியல் களத்தில் இறங்க, இப்படம் எடுக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியன் 2 படம் எடுப்பதை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் இயக்குனர் ஷங்கர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இந்தியன் 2 என எழுதப்பட்டிருக்கும் வெப்பக்காற்று பலூன் ஒன்றை தாய்வான் நாட்டில் ஷங்கர் பறக்கவிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement