சசிகலா நலமுடன் இருக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறையிலுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நலமுடன் இருப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையிலுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.

இதற்காக சிறைத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த அமைச்சர்கள் சரியாக பகல் ‌1.30 மணிக்கு சிறை வளாகத்திற்குள் சென்று சந்தித்தனர். சசிகலாவுடன் அமைச்சர்களின் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. பின்னர் வெளியே செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement