JUST IN
  • BREAKING-NEWS ‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..! - சுப்பிரமணியன் சுவாமி
  • BREAKING-NEWS ‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‌இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்
  • BREAKING-NEWS ‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS ‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
  • BREAKING-NEWS ‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் நித்யகல்யாணி பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விருதுநகரில் மருத்துவக் குணம் வாய்ந்த பூக்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காசோளத்திற்கு பதிலாக, அதிகளவில் நித்யகல்யாணி பூ சாகுபடியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். 6 மாத கால பயிரான மருத்துவக் குணம் கொண்ட நித்யகல்யாணி பூ நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து தயாரிக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சியிலும் தாங்கி வளரக்கூடிய இந்த நித்ய கல்யாணி சாகுபடி செய்ய உளவு, களையெடுத்தல், உரம் உள்ளிட்ட செலவுகள் என்பது ஏக்கர் ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. 

ஒருமுறை பயிரிட்டால் மூன்று முறை பூக்கள் அறுவடை செய்யப்படுகிறது. அத்துடன் ஒருமுறை அறுவடை செய்யும் பூக்கள் ஏக்கருக்கு 20 ஆயிரம் வீதத்தில், மூன்று முறைக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடப்பதால் அதிக ஆர்வமுடன் பயிரிடுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். வறட்சியினால் மக்காசோள பயிர்கள் வாடிவிட்டதால் மீண்டும் மக்காச்சோள பயிர்கள் பயிரிடமால், அதிக லாபம் தரும் நித்ய கல்யாணி பூ சாகுபடியை மாற்று பயிராக சாகுபடி செய்வதாகவும் விவசயிகள் கூறுகின்றனர்.

Advertisement: