[X] Close >

முரசொலி இணையதளம் முடக்கம்

Murasoli-website-Hacked

திமுகவின் அதிகாரப்பூர்வ முரசொலி நாளிதழின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. 


Advertisement

திமுகவின் அதிகாரப்பூர்வமான முரசொலி நாளிதழின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். முரசொலி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஹேக்கர் படத்துடன் புத்தாண்டு வாழ்த்தையும் ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர். இணையதள பாதுகாப்பு குறித்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஹேக்கர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு இரண்டாவது முறையாக நடந்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் முரசொலி நாளிதழின் இணையதளத்தை லீஜியன் குழுவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, முடக்கப்பட்டுள்ள முரசொலி இணையதள பக்கத்தை சீரமைக்க தொழில்நுட்ப குழுவினர் தீவிர நடடிவக்கை எடுத்து வருகின்றனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close