11 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, மாலி, சோமாலியா, வடகொரியா, சூடான், சிரியா, ஏமன், தெற்கு சூடான் ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டு இருந்தார். இந்தத் தடை உத்தரவு 120 நாட்கள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகும் அந்தத் தடை உத்தரவு முழுமையாக நீக்கப்படவில்லை.
எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சியாட்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் தலைமையில் நடந்தது. அப்போது, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதை நீதிபதி ஏற்கவில்லை. எனவே 11 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். அரசின் இத்தகைய முடிவு ஒருதலைபட்சமானது என நீதிபதி ராபர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?