[X] Close >

10வது சுற்று முடிவில் 48,808 வாக்குகளுடன் தினகரன் முன்னிலை

TTV-Dhinakaran-Continuous-Leading-in-RK-Nagar

அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 23,441 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


Advertisement

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 10வது சுற்று முடிவிலும் 48,808 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இவர் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 23,441 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 10 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 சுற்றிலும் டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார்.


Advertisement

10வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 48,808 வாக்குகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 25,367 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உள்ளார். திமுக வேட்பாளர் 13,015 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,116 வாக்குகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பாஜக 626 வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 1,151 வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பாஜக பெற்று வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close