ஆர்.கே நகர் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்!

RK-Nagar-By-Election-Polling--59-Nominees

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் முக்கிய அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என 59 பேர் களத்தில் உள்ளனர். 


Advertisement

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் ஆளும் அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். மேலும், சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் இடைத்தேர்தல் களத்தில் உள்ளார். 

அதிமுக வேட்பாளர் மதுசூதனின் பெயர் கொண்ட இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதில் ஒருவருக்கு மின் கம்பமும், மற்றொருவருக்கு இரும்புக் கம்பியும் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் பெயரில் மேலும் 3 பேர் களமிறங்குகின்றனர். ஒருவருக்கு பெட்டி சின்னமும், மற்றொருவருக்கு ஆட்டோ-ரிக்சா சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவருக்கு துளையிடும் கருவி ஒதுக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement