ஸ்டாலின் - சோனியா சந்திப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.


Advertisement

டெல்லியில் சோனியாகாந்தி, ராகுல்காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்களுக்கு அந்த சந்திப்பு நீடித்தது. அப்போது, சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் விசாரித்தார். தமிழக அரசியல் குறித்தும், தேசிய அரசியல் நிலவரம் குறித்தும் அப்போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement