ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை மீட்பதற்கு, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்போவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்திற்கு வந்தார். அங்கு, மீனவ மக்களை சந்தித்த ராகுல் காந்தி காணாமல்போன மீனவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராமசாமி, விஜயதரணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
காணாமல்போன மீனவர்களை மீட்க உதவுமாறு ராகுல் காந்தியிடம் மீனவப் பெண்கள், குடும்பத்தினர் மனு அளித்தனர். பின்னர் பேசிய ராகுல் காந்தி, ஒகி புயலால் மீனவர்களும், விவசாயிகளும் பெருந்துயரத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்க காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், காணாமல்போன மீனவர்களை மீட்க நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் எழுப்பப்படும் என்றும், தமிழக அரசிடமும் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!