திருப்பூரில் வரதட்சனை கேட்டு கணவர் குடும்பத்தினர் தாய் வீட்டுக்கு அனுப்பியதால், மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சியை அருகே உள்ள ஏர்பெட்டி கிராமத்தை சேர்ந்தவர் அங்காள அபிராமி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் மணி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் திருப்பூரில் வசித்து வந்த நிலையில், அபிராமியிடம் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் நிர்பந்தித்துள்ளனர். அத்துடன் வரதட்சணையைப் பெற்று வந்தால்தான் வாழ முடியும் எனக்கூறி தாய் வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் தாய் வீட்டில் வசித்து வந்த அபிராமி மனமுடைந்துள்ளார். இந்நிலையில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அபிராமி உயிரிழந்ததார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?