ஈஷா மையம் 13 லட்சம் சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளதாக இடதுசாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, கோவையில் நாளை மறுதினம் நடைபெறும் ஈஷா மைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் முடிவை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்ற இடத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்பதும், மாநில முதலமைச்சர் பங்கேற்பதும் சரியாக இருக்காது என தெரிவித்தார். சட்டவிதிகளுக்கு முரணாக செயல்படுகின்ற தனிநபர், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கின்ற பிரதமரும், முதலமைச்சரும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்வது தவறான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது போன்றதாகி விடும் என கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் பேசிய போது, சட்ட மீறல் நடைபெற்றிருப்பதாக வனத்துறை கூறுகின்ற இடத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்கலாமா என கேள்வி எழுப்பினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசியபோது, மதத்தின் பெயரால் ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறினார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர், மாநில முதலமைச்சர் வரக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!