விராத் கோலி மீண்டும் இரட்டை சதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி மீண்டும் இரட்டை சதம் அடித்தார்.


Advertisement

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்  தவன், புஜாரா ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்து வெளியேறினர். மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜயும், கேப்டன் கோலியும் இணைந்து, இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாதிசைகளிலும் விரட்டி நேர்த்தியாக ரன்கள் சேர்த்தனர். முரளி விஜய், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 11-ஆவது சதத்தை அடித்‌தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் சதமடித்தார். டெஸ்ட் போட்டிகளில் கோலியின் இருபதாவது சதமாக இது அமைந்தது.

முரளி விஜய் 155 ரன்களிலும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே ஒரு ரன்னிலும் வெளியேறினர். கோலி 156 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்திருந்தது.


Advertisement

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.  சிறப்பாக ஆடிய விராத் கோலி இரட்டை சதம் அடித்தார். இது அவரது 6-வது இரட்டை சதம். கடந்த போட்டியிலும் அவர் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

10.50 மணி நிலவரப்படி இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 456 ரன்கள் குவித்திருக்கிறது. கோலி 205 ரன்களுடனும் ரோகித் சர்மா 41 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement