கன்னியாகுமரியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி

CM-Palanisamy-said-about-Kanyakumari-Ockhi-recovered

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


Advertisement

ஒகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. கன்னியாகுமரியில் மின்கம்பங்கள் முழுவதும் சாய்ந்துள்ளதால், அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக 3,750 மின்கம்பங்கள் ‌சாய்ந்துள்ளதாகவும், அவற்றை சீர் செய்ய இரண்டாயிரம் மின்வாரிய பணியாளர்கள்‌ பிற மாவட்‌டங்களில் இருந்து அங்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூரில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், சேலம் மாநகரில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாலங்கள் அனைத்து விரைவில் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார். அத்துடன் கன்னியாகுமரியில் மின்கம்பங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரையில் அங்கு மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement