அமைச்சர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப பேசி வருவதாகவும், அவர்களுக்கு நாவடக்கம் தேவை எனவும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள அரசியல் சூழலில் பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருவது எம்பி மைத்ரேயன் முகநூலில் பதிவிட்டு இருந்த கருத்து. ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த போதும் இரு மனங்களும் இணையவில்லை என்ற அவரின் பதிவு பல கேள்விகளை எழுப்பியது. இந்த கருத்திற்கு அந்த அணிகளின் அமைச்சர்கள் பலர் பல்வேறு விமர்சனைங்களை கூறினார்.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயனின் கருத்துக்கு மாற்று கருத்து இல்லை என்றும், காலப்போக்கில் சரியாகிவிடும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தங்களின் தேவைக்கு ஏற்ப பேசி வரும் அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி அதிகார தீர்ப்பு வெளியாகி உள்ளது.
Loading More post
கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான் தனது மகனுடன் சபரிமலையில் தரிசனம்
தடுப்பூசி திருவிழா: இந்தியாவில் ஒரேநாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை
கோயம்பேட்டில் சிறு குறு வியாபாரம் அனுமதிக்கப்படுமா? இன்று பேச்சுவார்த்தை
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!