விற்பனைக்கு வந்தது உலகின் முதல் திருநங்கை பொம்மை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகின் முதல் திருநங்கை பொம்மை நியூயார்க் பொம்மைகள் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது.


Advertisement

குழந்தைகளின் பிரியமான விளையாட்டுப் பொருளாகக் கருதப்படும் பொம்மைகள் இதுவரை ஆண், பெண் என இரு வடிவங்களிலேயே வெளியிடப்பட்டு வந்தன. உலகில் முதன்முறையாக கிங்ஸ்டனில் உள்ள டோனர் எனும் பொம்மை நிறுவனம் திருநங்கை வடிவிலான பொம்மைகளைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இளம் திருநங்கையான ஜாஸ் ஜென்னிங்ஸை மாடலாக வைத்து இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திருநங்கைகள் குறித்த நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் ஏற்படும் என்று ஜாஸ் ஜென்னிங்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொம்மை 18 அங்குல உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,000த்துக்கு (89.99 அமெரிக்க டாலர்கள்) விற்பனை செய்யப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement