மலேசிய மணல் விவகாரம்: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணல் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணல் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மணல் குவாரிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. அதில், துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள மணலை வெளியே எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. மணலை எடுத்துச் செல்வது தொடர்பாக தற்காலிக உரிமம் வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு இன்று தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement