ஆளுநர் தலையீடு நோய் தமிழகத்திற்கும் பரவியது: நாராயணசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிடும் நோய் புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் பரவியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

கோவையில் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் நடத்திய ஆலோசனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாராயணசாமி, பாஜக தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் அரசை கட்டுப்படுத்த ஆளுநரை பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், “அரசில் ஆளுநர் தலையிடும் வியாதி தமிழகத்திலும் பரவியிருக்கிறது. ஆளுநர் என்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுப்பதற்காகத்தான். அதுமட்டுமில்லாமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதுகுறித்து அமைச்சரவைக்கு தெரிவித்துவிட்டு அதனை மறுபரீசிலனை செய்ய சொல்ல வேண்டும். தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து பேசுவது; உத்தரவு போடுவது எல்லாம் ஆளுநரின் வேலையல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு உள்ள வேலை அது. ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசும், பிரதமர் மோடியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவதற்காக ஆளுநரை வைத்தும், துணை நிலை ஆளுநரை வைத்தும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இந்த வேலையை செய்து வருகின்றனர். இது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும். இதனை வன்மையாக நான் கண்டிக்கிறேன்” என்றார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement