அசத்தலாக நடனமாடி மனைவியை மகிழ்வித்த தோனி: வைரலாகும் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அசத்தலாக நடனமாடி தனது மனைவியை மகிழ்விக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 


Advertisement

தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் மீது அவ்வவ்போது விமர்சனங்கள் எழுகிறது. பின்னர் அவரது சிறப்பான ஆட்டத்தால் விமர்சனங்கள் மறைந்து போகிறது. இதனையெல்லாம் தோனி மிகவும் அமைதியாகவே கவனித்து வருகிறார். விமர்சனங்கள் குறித்து ஒருபோதும் அவர் கருத்துக்கள் தெரிவிப்பதில்லை. 

தோனி, அவரது பேட்டிங் திறமை, உடனடியாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன், நகைச்சுவை தன்மை ஆகியவற்றிற்காக பலராலும் பாராட்டப்படுகிறார், ரசிக்கப்படுகிறார். தற்போது அவர் அற்புதமாக நடனமாடுவார் என்பது தெரியவந்துள்ளது. தோனி அசத்தலாக நடனமாடி தனது மனைவியை மகிழ்விக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தோனி 2012ம் ஆண்டு வெளிவந்த 'டேஸி பாய்ஸ்' படத்தில் வரும் 'ஜஹாக் மார் கே' என்ற பாடலுக்கு தனது கை, கால்களை அற்புதமாக அசைத்து நடனமாடுகிறார். அப்போது அவரது அருகில் அமர்ந்திருக்கும் மனைவி சாக்‌ஷி, தோனி ஆடுவதை பார்த்து குலுங்க, குலுங்க சிரிக்கிறார். 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement