[X] Close >

பேரறிவாளன் தந்தை உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதி

Perarivalan-father-admitted-in-Hospital

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தண்டுவடம், நரம்பியல், கால் செயலிழப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வருவதால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 26 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டு, ஜோலார்ப்பேட்டையில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்தார். தந்தையின் உடல்நிலை காரணமாக அவருக்கு முதலில் ஒரு மாதம் வழங்கப்பட்ட பரோல் பின்னர் மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இரண்டு மாத கால பரோல் முடிந்து அக்டோபர் 24-ஆம் தேதி பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

பேரறிவாளன் பரோலில் வந்திருந்தபோது சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், அவரது தந்தை குயில்தாசன் ஒருவாரம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் பரோல் முடிந்து சிறை சென்றதால் பாதி சிகிச்சையில் குயில்தாசன் வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது உடனடியாக சிகிச்சை பெறவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இன்று சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் உள்நோயாளியாக குயில்தாசன் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடனிருந்து குயில்தாசனை கவனித்து வருகிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close