இந்தியா- இத்தாலி இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா, இத்தாலி நாடுகள் இடையே ரயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 


Advertisement

இத்தாலி பிரதமர் பலோலா ஜென்டிலோனி இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி அவருடன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் இத்தாலியும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உறுதி கொண்டுள்ளதாகக் கூறினார். இணைய வழி குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஒன்றாக இணைந்து முறியடிக்கவும் இருநாடுகளும் ஒத்துழைக்க முன்வந்துள்ளதாக மோடி கூறியுள்ளார். இருநாடுகள் இடையே வர்த்தக உறவு உள்ளிட்ட விரிவான ஆலோசனை நடந்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா, இத்தாலி பிரதமர்கள் முன்னிலையில், இருநாடுகள் இடையே ரயில்வே பாதுகாப்பு இருதரப்பு வர்த்தகம் முதலீடுகள் உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement