[X] Close >

ராஜராஜ சோழனின் சதயவிழா: மாவட்ட ஆட்சியர் மரியாதை

Rajarajan-s-sadhaya-vizha-today

சதய விழா வினை முன்னிட்டு தஞ்சையில் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


Advertisement

ராஜராஜசோழனின் 1032ஆவது சதயவிழா நேற்று தொடங்கிய நிலையில், இன்று சோழனின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள், சதயவிழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். யானை மீது திருமுறை வீதி உலாவும், திருமுறை ஓதுவார்கள் பன்னிரு திருமுறை பாடலை பாடியபடி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர். தஞ்சை பெருவுடையாருக்கு 47 வகையான அபிசேகமும் நடைபெற்றது. விழாவையொட்டி இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற உள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close