JUST IN

Advertisement

சினிமாவைப்போல் அரசியலிலும் கமல் முத்திரை பதிப்பார்: தொல்.திருமாவளவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொசஸ்தலை ஆற்றை பார்வையிட்ட கமலின் களப்பணியை வ‌ரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சினிமாவில் முத்திரை பதித்த கமல், அரசியலிலும் முத்திரை பதிப்பார் என்றும் திருமாவளவன் கூறினார்.


Advertisement

ட்விட்டரில் அரசியல் செய்கிறார் என்ற விமர்சனங்கள் வந்த நிலையில், முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார் கமல் ஹாசன். கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலக்கப்படுவது பற்றி விரிவாக நேற்று ட்விட்டரில் தெரிவித்த கமல் ஹாசன், கழிவுகள் கலப்பால் எண்ணூர் துறைமுகப்பகுதியில் ஏற்படும் ஆபத்துகளையும் விவரித்திருந்தார். இந்த சூழலில், அவர் இன்று காலை எண்ணூர் கழிமுகப்பகுதிக்கு நேரில் சென்றார். அப்போது கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் உள்ள மக்களிடம் அனல்மின் நிலைய கழிவுகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கமல் கேட்டறிந்தார்.

இந்நிலையில் கமலின் களப்பணியை வ‌ரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கமல்ஹாசன் தீவிரமான மக்கள் பணியில் ஈடுபட இருக்கிறார் என்பதை இன்றைய அவரின் களப்பணி உணர்த்துகிறது. கொசஸ்தலை ஆற்றை பார்வையிடும் பணியில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில் திரைப்படத் துறையில் தீவிரமாக பணியாற்றி கமல் முத்திரை பதித்துள்ளார். அரசியலிலும் அவர் முத்திரை பதிப்பார் என நம்புகிறேன். அவருடைய அரசியல் பணி, முதலில் ஆற்றில் இருந்து தொடங்குகிறது. நன்றாக நீந்தி கரையேறுவார் என வாழ்த்துகிறேன்" என்றார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement