மயிலாடுதுறை அருகே பாஜக- விசிக இடையே தள்ளுமுள்ளு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Advertisement

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மயிலாடுதுறைக்கு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றிருந்தார். அப்போது பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து பா.ஜ.க.வினருக்கும் வி.சி.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தியதோடு, வி.சி.க.வினரைக் கைது செய்தனர்.

மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம், நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக திருமாவளவன் விமர்சித்திருந்தார். அதற்கு பதில் அளித்த தமிழிசை சவந்தரராஜன், திருமாவளவன்தான் அதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துகளை செய்வதாக கூறியிருந்தார். இதனால் பாரதிய ஜனதாவிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் வலுத்தது. சில இடங்களில் இரண்டு தரப்புக்கும் இடையே கைகலப்பு சம்பவங்களும் நடைபெற்றது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement