[X] Close >

சூர்யாவின் 'சொடக்கு' பாடல் டீஸர் வெளியீடு

Sodakku-song-treaser-released

நடிகர் சூர்யா நடித்து வெளியாக இருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'சொடக்கு' என்ற பாடலுக்கான டீசர் நள்ளிரவில் வெளியானது.


Advertisement

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் `தானா சேர்ந்த கூட்டம்'. அனிருத் இசையில் ஏற்கெனவே வெளியான இப்படத்தின் "நானா தானா வீணா போன" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளையொட்டி இரண்டாவது பாடலின் டீஸரை நள்ளிரவில் வெளியிட்டுள்ளனர். ‘சொடக்கு மேல சொடக்கு போடுது.. என் விரலு வந்து’ என்ற பாடலுக்கான வரிகளை மணி அமுதவன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளனர். டீஸரில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களை கலக்கிய ஜிமிக்கி கம்மல் பெண், சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்பட பலர் வருகின்றனர். இந்த பாடல் டீஸரை சூர்யா ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close