[X] Close >

மரம் வெட்டும் பணியைத் தொடங்கினார் வைகோ

VAIKO-ACTION-IN-THIRUNELVELI

நெல்லை மாவட்டம் வீரணார்புரத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.


Advertisement

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வைகோ நீதிபதிகளிடம் முறையிட்டார். அதற்குப் பதில் அளித்த நீதிபதிகள் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற முடியாது என்றும் அதிகாரிகள் அப்பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். சீமைக் கருவேல மரங்களை அகற்ற உங்கள் கட்சி சார்பில் என்ன பணி மேற்கொள்ளப்பட்டது என்று கேள்வியும் எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த வைகோ எங்கள் கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சொந்த ஊரில் நானே கருவேல மரங்களை அகற்றினேன் என்றும் கூறினார். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை வைகோ தொடங்கிவைத்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close