உலக சாதனை படைக்கும் இஸ்ரோ ஆய்வு மையம்

isro-to-create-a-world-record

ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலக சாதனை படைக்கவுள்ளது.


Advertisement

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து வருகிற 15ஆம் தேதி ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 37 செயற்கைக் கோள்களை ரஷ்யா செலுத்தியது தான் இப்போதைய சாதனையாக இருக்கிறது. அதை விட இரண்டு மடங்குக்கு மேல் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைக்க இருக்கிறது. இதற்கு முன் ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை இஸ்ரோ செலுத்தியுள்ளது. 15ஆம் தேதி இஸ்ரேல், கஜகிஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்‌கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக் கோளையும், இந்தியா சார்பில் 2 மற்றும் அமெரிக்காவின் 96 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement