விசாகப்பட்டினத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதாவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளாவில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்து அண்மையில் நடந்த பாத யாத்திரை நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு திரண்ட பாரதிய ஜனதாவினர், பினராயி விஜயனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த விசாகப்பட்டினம் காவல்துறையினர் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பாரதிய ஜனதாவின் சட்ட மேலவை உறுப்பினர் மாதவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
Loading More post
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
''அழியவில்லை; வாழ்கிறது'': அரிய பறவையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள்!
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?