[X] Close >

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

Competition-announced-for-school-students

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 6-ஆம் தேதி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு போட்டி நடத்தப்படவுள்ளது.


Advertisement

அதன்படி 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படவுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியரின் ஒப்புதலுடன், மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை மற்றும் உதவி இயக்குநர்களை நேரில் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்ப படிவத்தை http://www.tamilvalarchithurai.com/ என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டிகளில் வெல்லும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 10,000 ரூபாயும் 2-ஆம் பரிசாக 7,000 ரூபாயும், 3-ஆம் பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close