JUST IN

Advertisement

கருணாநிதி நலமுடன் உள்ளார்: கனிமொழி எம்.பி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் என்று அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.


Advertisement

உடல்நல கோளாறு காரணமாக கடந்த 7 மாதங்களாக கருணாநிதி ஓய்வில் உள்ளார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொறுத்தப்பட்டு அதன் மூலமாகவே உணவு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தனது கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி ஓய்வு எடுத்து வருகிறார். 

தேவைப்படும் பொழுது மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, முரசொலி பவளவிழா அழைப்பிதழை கருணாநிதியிடம் ஸ்டாலின் வழங்கிய புகைப்படம் வெளியானது. இதே போல் மருத்துவமனையில் கருணாநிதி தொலைக்காட்சி பார்த்த படமும் வெளியிடப்பட்டது.
 
இந்த நிலையில், இன்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவின. இதனையடுத்து, “திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்த தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் உள்ளார்” என்று அவரது மகளும் திமுக எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement