ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் நீடிக்கும் இழுபறி..

GST-COUNCIL-ENDS-TODAY-WITH-NO-RESULT

டெல்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி வரி தொடர்பான கூட்டம் முடிவு எடுக்கப்படாமல் நிறைவடைந்தது.


Advertisement

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு இழப்புகள் அதிகம் ஏற்படும் என்றும் கூடுதல் இழப்பீட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுகள் வலியுறுத்தின. மேலும் கடலோரப் பகுதி வணிகத்தில் ஜிஎஸ்டி வரி வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கடலோர மாநிலங்கள் வலியுறுத்‌தின. இதையடுத்து ஜிஎஸ்டி
வரி தொடர்பான பல்வேறு அம்சங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்ததால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு
எடுக்கப்படாமல் நிறைவடைந்தது. மேலும் இது போன்ற விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்படாததால் வரும் 16ம் தேதி மீண்டும் கூடிப் பேசுவதென
முடிவெடுக்கப்பட்டது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement