[X] Close >

தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு குறைவு

Rain-Shortage-In-tamilnadu

தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1876 ஆம் ஆண்டிற்கு பிறகு பருவமழை 41% அளவிற்கு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்‌ளது.


Advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 62 % குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். குறிப்பாக கடலூர், புதுச்சேரி, நாமக்கல் ஆகிய இடங்களில் இயல்பை விட 81 % குறைவாக மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இயல்பை விட 70 முதல் 80 % மழை குறைவாக பெய்துள்ளதாகவும், 26 மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீதத்திற்கும் குறைவாக மழைப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆண்டின் மழைப் பொழிவு இயல்பை விட 41% குறைவாக பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close