[X] Close >

ஆம் ஆத்மியில் இணைகிறாரா கமல்?

delhi-cm-aravind-kejriwal-met-actor-kamal-hassan-in-chennai

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். இதற்காக கெஜ்ரிவால் டெல்லியில் இருந்து மதியம் சென்னை வந்தார். இதைத்தொடர்ந்து அவர் கமல்ஹாசன் இல்லத்துக்கு சென்றார். சமீப காலமாக அரசியல் பிரவேசம் குறித்து கமல்ஹாசன் பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Advertisement

இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டதையே நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நாங்கள் சந்தித்து பேசிக்கொண்ட விசயங்கள் என்னவாக இருக்கும் என்று அனைவராலும் யூகிக்க முடியும். ஊழலுக்கு எதிரான யாருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த வகையில் இந்த உறவு தொடர்கிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தது பெருமையாக உள்ளது. எனது வீட்டிற்கு அரசியல் புதிதல்ல. எனது தந்தை இருந்த போது அரசியல் பேசினார். நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தேன். ஊழலையும், மதவாதத்தையும் எதிர்ப்பதில் எங்கள் இருவரின் சிந்தனைகளும், எண்ணங்களும் ஒரே மாதிரியாக உள்ளன என்று கூறினார்.

பிறகு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நான் எப்போதும் கமல்ஹாசனின் தீவிர ரசிகன். அவர் நேர்மைக்கும், துணிவுக்கும் பெயர் போனவர். இந்தியா ஊழல் மற்றும் மதவாதம் உள்ளிட்ட பெரிய பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், ஒத்த கருத்துடைய அனைவரும் கலந்தாலோசித்து, பிரச்னைகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. நம் நாட்டில் நடந்து வரும் மதவாதத்தையும், ஊழலையும், நாட்டின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கமல்ஹாசன் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். இந்த சந்திப்பில் எங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். இனிவரும் காலங்களில் தொடர்ந்து சந்தித்து பல விசயங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம். கமல்ஹாசனின் வரவேற்புக்கு நன்றி என்று பேசினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close