விஜய் முடித்தார்... ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கினார்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மெர்சல் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் பின்னணி இசைக்கோர்ப்பு பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கியிருக்கிறார். 


Advertisement

மெர்சல் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விடுபட்ட காட்சிகள் துரைபாக்கம் ஐடி பார்க் பகுதியில் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது மருத்துவமனை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் இறுதி நாள் படப்பிடிப்பு என்பதால் பூசணிக்காய் சுற்றும் வைபவம் நடைபெற்றது. 
இந்நிலையில் மெர்சல் படத்திற்கு  பின்னணி இசையமைக்கும் பணியை தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி இருக்கிறார்.  இந்தப்பணியில் அவர் 20 முதல் 30 நாட்கள் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement