அஜித் நடித்த விவேகம் பட டீசர் உலக அளவில் சாதனை படைத்துள்ளது.
சிவா இயக்கத்தில் விவேகம் படம் திரைக்கு வந்து 3 வாரங்களை கடந்து விட்டது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. விவேகம் படத்தின் டீசர்தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்திருந்தது. முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்திருந்தது. இந்நிலையில் விவேகம் படத்தின் டீசரை இதுவரை 2 கோடியே 5 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 5 லட்சத்து 75 ஆயிரம் பேர் இதுவரை லைக் செய்துள்ளனர்.
இதன் மூலம் உலக அளவில் அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையை விவேகம் டீசர் நிகழ்த்தி உள்ளது. முதலிடத்தில் இருந்த ஹாலிவுட் படமான ஸ்டார்வார்ஸ் திரைப்பட டீசர் 5 லட்சத்து 73 ஆயிரம் லைக்குகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. அவென்ஜர்ஸ் திரைப்படம் 5, லட்சத்து 25 ஆயிரம் லைக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த திரைப்படங்களில் உலக சாதனை படைத்த முதல் டீசர் என்ற சாதனையை விவேகம் படம் பெற்றுள்ளது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?