JUST IN

Advertisement

ஏழைகளை வடிகட்டவா நீட்? கனிமொழி கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீட் என்பது தகுதித் தேர்வா அல்லது தகுதியான ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வடிகட்டும் தேர்வா? என்று நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.


Advertisement

நீட் தேர்வை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்.பி. கனிமொழி, ‌தமிழக காங்கிர‌ஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.‌ இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

நீட் தேர்வுக்கு எதிரான பாதகைகளை ஏந்தியவாறும் முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கனிமொழி, நீட் தகுதித் தேர்வல்ல என்றும் ஏழை எளிய மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட தேர்வு என்று கூறினார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement