சென்னையில் இயங்கிய பாரம்பரிய ரயில்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

58 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் மூலம் இயங்கும் பாரம்பரிய ரயில்  சென்னையில் இன்று இயக்கப்பட்டது. 


Advertisement

இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று நீராவி என்ஜினுடன் கூடிய பாரம்பரிய ரயில் இயக்கப்படுவது வழக்கம். இந்த வருடம் அந்த ரயில் இயக்கப்படவில்லை. அதற்கு பதிலாக இன்று இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மூவர்ணக் கொடி போன்று அலங்கரிக்கப்பட்டிருக்கும் ரயில் இன்று சென்னை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்டது. 

இதை இடைப்பட்ட ரயில் நிலையங்களில் திரண்டிருந்த பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர். இதில் ரயில்வே அதிகாரிகள் பயணித்த நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீராவி என்ஜின் ரயில் கடைசியா‌க கடந்த 2013ம் ஆண்டு இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement