தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகியுள்ளார்.


Advertisement

தலைமைச் செய‌லகத்தில் உள்ள முத‌லமைச்சர் அலுவலகத்திற்குச் சென்‌ற அவர், பொறுப்புகளை ஒப்படைத்தார். எனினும், அவரது பதவி விலகல் ஏற்கப்பட்டதா என்பது குறித்து அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகவில்லை.

2012-ஆம் ஆண்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவியேற்ற ஷீலா பாலகிருஷ்ணன், 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஓய்வு பெற்ற நிலையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் தமிழக அரசு நிர்வாகத்தை இயக்குவதில் அவர் முக்கியப் பங்கை வகித்து வந்தார்.


Advertisement

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அரசு தொடர்பான அத்தனை நடவடிக்கைகளையும் அவரே மேற்கொண்டதாக கூறப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த ஷீலா பாலகிருஷ்ணன், 1976-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணித்துறையில் கால்பதித்தார். 2002-ஆம் ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற அதிகாரியாகத் திகழ்ந்தார் ஷீலா பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement