ஜல்லிக்கட்டு வன்முறை.. மக்கள் கண்காணிப்பகம் ரகசிய வாக்குமூலம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சென்னையில் ஏற்பட்ட வன்முறையில், போலீஸாரால் தாக்கப்பட்டவர்களிடம் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு ரகசிய வாக்குமூலம் பெற்றது.


Advertisement

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னா‌ள் துணைவேந்தர் வசந்திதேவி தலைமையிலான 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தது.

சென்னை மந்தைவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் ‌கலந்து கொண்டு வாக்குமூலம் அளித்தனர். இந்த விவகாரத்தில் தாமா‌க முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உதவி செய்யும் நோக்கில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதனை அறிக்கையாக தயார் செய்து ஒரு வார காலத்திற்குள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக மக்கள் கண்காணிப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement