உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர்களில் ஒருவர். 35 வயதாகும் செரினா, நியூயார்க்கில் உள்ள இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஓஹானியன் என்பவரை துணைவராக தேர்ந்தெடுந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கருவுற்றிருந்த இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
இதுவரை 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள செரினா, அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் செரினாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் வெற்றி பெற, பயிற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே குழந்தை பெற்றுள்ள செரினாவிற்கு, விளையாட்டு வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?