கோவை ஸ்மார்ட் சிட்டி சிஇஓ சுகன்யா ராஜினாமா

coimbatore-smart-city-ceo-suganya-resigned

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான தலைமை செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்ட சுகன்யா ராஜினாமா செய்தார்.


Advertisement

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கோவையில் செயல்படுத்துவதற்கு சி.இ.ஓ.வாக முன்னாள் எம்.எல்.ஏ.வும், அதிமுக பிரமுகருமான கே.பி.ராஜுவின் மகளான சுகன்யாவை கடந்த 1 ஆம் தேதி தேர்ந்தெடுத்தது சர்ச்சையை கிளப்பியது. பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தில், பெரிய நிறுவனத்தில் பெரிய பொறுப்புகளிலும் அனுபவமில்லாத 28 வயதான ஒருவரை நியமித்திருப்பது ஆளுங்கட்சியின் தலையீடு இருப்பதை தெளிவுப்படுத்தியுள்ளதாக திமுக உள்ளிட்ட அரசியல் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

நகரத்திற்கு மாபெரும் பொக்கிஷமாக கிடைத்துள்ள இந்த திட்டத்தை திறமை, அனுபவம், தொழில்நுட்ப அறிவு கொண்ட ஒருவரை புதிதாக நியமனம் செய்யவும், தற்போது செய்யப்பட்டுள்ள நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்த நிலையில், சுகன்யா ராஜினாமா செய்துள்ளார்.


Advertisement

முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டும், விரும்பதகாத விமர்சனங்களால் பணியில் தொடர விரும்பவில்லை என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உடனே ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், புதிய சி.இ.ஓ. நியமனம் செய்யும் வரை மாநகராட்சி ஆணையரே பொறுப்பு அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement