உலகில் பெரும்பாலான மனிதர்களின் மரணத்திற்கு காரணம் மாரடைப்புதான். மாரடைப்பு திடீரென்று ஏற்பட்டு திடீர் மரணத்தை ஏற்படுத்துவதாகத்தான் நம்மில்பெ ரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறியலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தோன்றிவிடும் என்கிறார்கள். பின்வரும் அந்த அறிகுறிகள் தெரிந்த உடன் மருத்துவரை அணுகுவது அவசியம்:
அதிகப்படியான சோர்வு
நீங்கள் எந்தவொரு வேலையும் செய்யாமல் இருக்கும்போதும் கூட உடல் முழுக்க சோர்வாக காணப்படுகிறதா? ஒரு நீண்ட நேர நல்ல தூக்கத்திற்கு பின்பும் உடல் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்களா? களைப்பாகவும் மறுபடியும் தூங்க வேண்டும் என்ற எண்ணமும் வருகிறதா? இது மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம்.
தூக்கப் பிரச்னை
நீங்கள் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது உங்களாலே உங்கள் தூக்கம் தடைபடுகிறது என்றால் உடனடியாக மருத்துரை அணுகுங்கள். உங்களுக்கு தேவையே இல்லாத நேரத்தில் கூட தூக்கத்தில் எழும்பி அடிக்கடி பாத்ரூம் செல்கிறீர்கள். இல்லையென்றால் பசி எடுப்பபது போல் உணர்கிறீர்கள் என்றால் சற்று கவனமுடன் இருங்கள்.
சுவாச பிரச்னை
உங்களால் எந்தவித சிரமும் இன்றி மூச்சு விட முடிகிறதா? ஆம் என்றால் உங்களுக்கு பிரச்னை இல்லை. அதுவே மூச்சுவிடவே கஷ்டமாக உணர்ந்தால் மருத்துவரை உடனே சென்று பாருங்கள்.
மார்பில் வலி
உங்கள் மார்பில் அடிக்கடி வலி ஏற்பட்டால் அது மாரடைப்பிற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். அதுமட்டுமின்றி நெஞ்சு எரிவது போல் அடிக்கடி தோன்றினாலும், பிரச்னை சிறியது என்று நினைக்காமல் மருத்துவரை பாருங்கள். அஜீரணக் கோளாறு இருந்தாலும் லேசாக விட்டுவிடாதீர்கள்.
பலவீனம்
உங்களின் இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில் உங்களின் முதுகெலும்புகளில் வலி ஏற்படும். அப்போது உங்களின் இதயம், முதுகெலும்பு, கைகளோடு தொடர்புடைய நரம்புகள் பாதிப்படையும். இதனால் உங்கள் உடல் பலவீனம் அடையும். இது மாரடைப்புக்கு இட்டுச் செல்லலாம். எச்சரிக்கையாக இருங்கள்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?