ஸ்மார்ட்போன் பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் காலை எழுந்தவுடன் மற்றும் இரவு உறங்கச் செல்ல முன்னும் செய்யும் வேலைகளில் செல்போன் பயன்பாடு முக்கியமானதாக இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக டெலாய்ட் குளோபல் மொபைல் கன்சூமர் சர்வே 2016 என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில், காலை எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்களில் ஸ்மார்ட் போனை தேடி எடுத்து விடுவதாக 61 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், முதல் அரை மணி நேரத்தில் ஸ்மார்ட்போனை எடுத்துவிடுவதாக 88 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதேபோல 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மொபைலை எடுத்துவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இரவு தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பாக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதாக ஆய்வில் பங்கேற்ற 74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் முக்கிய சாராம்சமாக ஆய்வாளர்கள் கருதுவது, உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதகாவும், இதனால் மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் 53,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2,000 பேர் பங்கேற்றனர்.
இந்தியாவில் இருந்து இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 54 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் மூலம் வங்கி இருப்புத் தொகையை அறிவதாகவும், சேவைகளுக்கான கட்டணத்தைச் செலுத்த 54 சதவீதம் பேர் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். காலை எழுந்தவுடன் சமூக வலைதள செயல்பாடுகள் மற்றும் வாட்ஸப் போன்ற உடனடி மெசேஜ் செயலிகள் குறித்த தகவல்களை மக்கள் முதலில் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இ-மெயில் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்