[X] Close

"என் கணவரை நான் சட்டப்படி திருமணம் செய்யவில்லை" - திரிணாமுல் எம்பி நுஸ்ரத் ஜஹான் விளக்கம்

Subscribe
Trinamool-MP-Nusrat-Jahan-says-marriage-with-Nikhil-Jain-not-legal

’’நான் என் கணவரை சட்டப்படி திருமணம் செய்யாததால் அவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறவில்லை’’ என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார்.


Advertisement

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலம் பசீர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார் நுஸ்ரத் ஜஹான். இவர் எம்பியான உடனே துருக்கி நாட்டின் தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இப்போது அண்மை காலமாக நுஸ்ரத் ஜஹான் தன் கணவரை பிரிந்துவிட்டதாகவும் அது சட்டப்படி நடைபெறவில்லை என்றும் சர்ச்சை எழுந்தது. மேலும் நுஸ்ரத் ஜஹான் கர்ப்பிணியாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

image


Advertisement

இப்போது அது குறித்து விளக்கமளித்துள்ளார் நுஸ்ரத் ஜஹான் "இந்திய நாட்டின் சட்டப்படி எங்களுக்கு நடைபெற்றது திருமணமே இல்லை. அதனால் விவாகரத்துக்கான தேவையே எழவில்லை. எங்களுடைய பிரிவு வெகுநாட்களுக்கு முன்பே நடந்துவிட்டது. இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம். தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் நான் அது குறித்து பெரிதாக பேசவில்லை. அது தேவையில்லை என நினைக்கிறேன்" என்றார்.

மேலும் "என்னுடைய சொத்து மற்றும் நகை விவகாரம் தொடர்பாக யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசிக் கொள்கிறேன். அதை சட்டப்பூர்வமாக அணுகுவேன். இனியும் என்னுடைய சொந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்பது சரியல்ல" என தெரிவித்துள்ளார் நுஸ்ரத் ஜஹான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close