[X] Close

பாஜக தலைமை விரும்பினால் பதவியை துறக்க தயார் - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Subscribe
Ready-to-resign-if-BJP-High-Command-leadership-wants-says-Karnataka-Chief-Minister-BS-Yediyurappa

பாரதிய ஜனதா கட்சியின் தலைமை விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார் என தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. கர்நாடக பாஜக-வில் ஆட்சித் தலைமையை மாற்ற வேண்டுமென்ற கோஷம் எழுந்த நிலையில் எடியூரப்பா அது குறித்து முதல்முறையாக இப்படி சொல்லியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

எடியூரப்பவை மாற்ற வேண்டும் என அவரது சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் போர்க்கொடியை தூக்கியுள்ள நிலையில் அது குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பதில் ஏதும் அவர் சொல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் “கட்சியின் மேல்மட்ட தலைமை என் மீது நமபீக்கை வைத்திருக்கும் வரை கர்நாடக முதல்வராக தொடருவேன். என்னை பதவி விலகுமாறு அவர்கள் எப்போது சொன்னாலும் நான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். அதன் பிறகு மாநிலத்தின் வளர்ச்சிக்காக இரவு பகல் பார்க்காமல் உழைப்பேன். இது தான் எனது நிலைப்பாடு. கட்சித் தலைமை என்னிடம் கொடுத்த பொறுப்பை நான் திறம்பட செய்து வருகிறேன். இனி எல்லாம் அவர்கள் கைகளில் தான் உள்ளது” என எடியூரப்பா தெரிவித்துள்ளார். 


Advertisement

எடியூரப்பா பதவி விலக உள்ளாரா? என்பதற்கு பாஜக கர்நாடக மாநில தலைவர் நளின்குமார் கடில் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் ‘இல்லை’ என மறுத்துள்ளனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close