[X] Close

“அதை மட்டுமே செய்ய மாட்டேன்! கோலி கேட்டதற்கு மறுப்பு சொன்ன ஜேமீசன்”- அப்படி என்ன கேட்டார்?

Subscribe
RCB-skipper-Virat-Kohli-Asks-to-bowl-Kyle-Jamieson-during-net-session-and-Jamieson-Denies-it-and-the-RCB-all-rounder-Dan-Christian-explains-the-scene-behind

நடப்பு ஐபிஎல் சீசனில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமீசன் விளையாடி வருகிறார். இந்நிலையில் கோலி, கைல் ஜேமீசன் இடம் கேட்டதற்கு  ‘முடியவே முடியாது திட்டவட்டமாக மறுத்துள்ளார்’. அப்படி கோலி கேட்டார் என்பதை விவரிக்கிறார் பெங்களூர் அணியின் ஆல் ரவுண்டர் டேன் கிறிஸ்டியன். 


Advertisement

“ஐபிஎல் 2021 சீசனுக்கான முதல் வாரம் அது. நாங்கள் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தோம். அப்போது நான், கோலி மற்றும் ஜேமீசன் என மூவரும் அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தோம். 

அந்த சமயத்தில் கோலி, ஜேமீசன் இடம் ‘வலைப்பயிற்சியில் எனக்கு ‘டியூக்’ பந்தில் பந்துவீச முடியுமா?’ என கேட்டார். அதற்கு ஜேமீசன் ‘என்னிடம் இரண்டு டியூக் பந்துகள் உள்ளன. இருந்தாலும் நான் அந்த பந்தில் உங்களுக்கு பந்து வீச மாட்டேன்’ என்றார்” என தெரிவித்துள்ளார் கிறிஸ்டியன். இதனை யூடியுப் சேனல் உடனான பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

image

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் டியூக் பந்தில் தான் விளையாட உள்ளனர். அதனால் தான் கோலி மற்றும் கைல் ஜேமீசன் அது குறித்து பேசியுள்ளனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close