7லட்சம் நிறுவனங்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை - நிதியமைச்சகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பான் கார்டு வைத்துள்ள 7 லட்சம் நிறுவனங்கள் வருமானக் கணக்கு தாக்கல் செய்வதில்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.


Advertisement

வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகவும், 2016-17ல் 6 லட்சத்து 83 ஆயிரம் நிறுவனங்கள்
கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் எழுத்து மூலம்
பதில் அளித்தார். கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் நிறுவனங்கள் டெல்லியிலும், 94 ஆயிரம் நிறுவனங்கள் மும்பையிலும், 63 ஆயிரம்
நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாகச் சொல்ல
முடியாது எனினும், இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறையின் கவனத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

loading...
Related Tags : income tax7lakh organisations

Advertisement

Advertisement

Advertisement